3 நாட்கள் கழித்து வித்தியாசமான சுவை கொடுக்கும் சுண்டக்காய் வத்த கொழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
எண்ணெயில் 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு -2 தேக்கரண்டி
Advertisment
Advertisements
உளுத்து பருப்பு -2 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
சீரகம் -2 தேக்கரண்டி
கொத்தமல்லி -6 தேக்கரண்டி
வெந்தயம்-1/2 தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் -4
வர மிளகாய் -10
பச்சை அரிசி 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 30
பூண்டு -20
தக்காளி (நறுக்கியது) - 3
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
புளி – 100கிராம்
பெருங்காய பொடி- 1 தேக்கரண்டி
சுண்டக்காய் வத்தல் - ஒரு கப்
செய்முறை:
முதலில், ஒரு பாணில் நெல்லெண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, கொத்தமல்லி, காஷ்மீர் மிளகாய், வரமிளகாய், பச்சை அரிசி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, மீண்டும் அதே பாணில் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். முதலில் வறுத்த மசாலாவுடன் இதனை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாணில் எண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து, அதன்பிறகு அதில் 100 கிராம் புளியை கரைத்த கரைசலை சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைத்து, அதில், மிக்ஸியில் அறைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கிவிடவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து விடவும்.
இறுதியான ஒரு பாணியில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காய் வத்தலை (வேறு எந்த வத்தல் கூட பயன்படுத்தலாம்) 3-4 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும். இறுதியாக ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து இறக்கி, குழப்பில் ஊற்றி தாளித்தால் சுவையான வத்த குழம்பு ரெடி.