/indian-express-tamil/media/media_files/2025/08/17/ricnd-2025-08-17-22-58-19.jpg)
வட இந்தியாவின் உத்தர பிரதேசதில் உள்ள ஒரு பாரம்பரிய அரிசி. புத்தர் சாப்பிட்ட அரிசி. புத்தப்பிச்சிகள் இன்று வரை இந்த அரிசிதான் சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். புத்தர் ஞானம் அடைந்த பிறகு உத்தர பிரதேசதில் உள்ள சித்தாத் நகர் என்ற நகரை கடந்து செலும்போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதமும் உங்களிடம் இருந்து பிரசாதமும் வேண்டும் என்று சொல்லும்போது புத்தர் இந்த அரிசியின் நெல்மணிகலையே அவர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
அது மட்டும் அல்ல, இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்கள் இந்த ஒரு அரிசிக்காகவே உத்தர பிரதேசதின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்திய அரசால் கொடுக்கப்படும் புவியல் குறியீம் இந்த அரிசிக்கு கிடைத்துள்ளது. உலகளவில் பாஸ்மதி ரைஸ்க்கு நிகராக ஒரு அரிசிக்கு டிமாண்ட்டு இருக்கிறது என்றால் இந்த அரிசியை சொல்லலாம். இந்த அரிசியின் பெயர் காலாநமக். மொத்தம் உள்ள 72 தாது உப்புக்களில் 40 தாது உப்புகளை இந்த அரிசி கொண்டுள்ளது. எந்த அரிசியிலும் இவ்வளவு மினரல்ஸ் இருக்காது.
இந்த அரிசியின் தன்மை, கருப்பு கவுனி அரிசியை விட கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இந்த அரிசியை அதிகம் சாப்பிட முடியாது ஒருவேளை சாப்பிட்டாலே போதுமானது. புத்தர்க்கூட இந்த அரிசியை ஒரு நேரத்தான் உணவா எடுத்துக்குவாராம். புத்தப்பிச்சிகள் பாறையில் உட்காந்து மெடிடேஷன் பண்ணும்போது அந்த பாறை இடுக்கில், ஒரு பானையில் தண்ணீயை ஊத்தி இந்த அரிசியை போட்டு வைத்துவிடுவார்கள். சூரிய ஒளியின் வெப்பத்திலேயே அந்த அரிசி வெந்து அதை சாப்பிடுவார்களாம்.
இன்று கொடிய நோய்களாக கருதப்படக்கூடிய புற்று நோய் செல்காரணிகளை அழிக்கும் சக்தி இந்த அரிசிக்கு உண்டு. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட உகந்த அரிசி. இதில் இருக்கும் லோ கிளைசமிக் இன்டெக்ஸ் உடல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நம்முடைய மூளையின் செயல்திறனை அதிகரித்து மூளையை பலம்பரச் செய்யும் இந்த அரிசி தொடர்ந்து எடுத்துக்கொள்ளுவதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படக்கூடிய அல்சீமர் என்ற நோய் தவிர்க்கலாம். கர்ப்பணி பெண்கள் இந்த அரிசி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்உபாதிகளை நீக்கக்கூடிய தன்மை இந்த அரிசியில் இருக்கிறது. முக்கியமாக சிறுநீரக, தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகத்தை வலப்படுத்தி அந்த குழாய்களை எல்லாம் சரி செய்யக்கூடிய தன்மை கொண்ட அரிசியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.