அரிசி மாவே தேவையில்லாமல், கொழுக்கட்டை சுவையாகவும், மென்மையாகவும் செய்யலாம். எவ்வளவு நேரம் ஆனாலும், இப்பதான் செய்த மாதிரி அதே மென்மையுடன் இருக்கும். வாங்க, எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம்
தண்ணீர்
தேங்காய் துருவல்
ஏலக்காய்த்தூள்
ரவை
உப்பு
நெய்
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு கப் வெல்லத்துடன், நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்து வடிகட்டி அதே கடாயில் சேர்க்கவும். அதனுடன் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து, பாகு நன்றாக வத்தி வந்ததும், சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
இப்போது வேறொரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஒரு கப் ரவை சேர்த்து, ரவை நன்றாக வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ரவை கலவை ஆறியதும், ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும். உங்களுக்கு எந்த வடிவம் வேண்டுமோ அந்த வடிவத்தில் கொழுக்கட்டைகளைத் தயார் செய்து, இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான, மெதுமெதுப்பான கொழுக்கட்டை தயார்!