பொதுவாக காரம் சாப்பிடுபவர்களை விட, இனிப்பை சாப்பிடுபவர்கள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு சாப்பிடாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக கேசரி பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த கேசரியை சரியான பதத்தில் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ரவை – ஒரு கிலோ
நெய் – அரை லிட்டர்
சர்க்கரை – 2 கிலோ
முந்திரி – 75 கி
உலர் திராட்சை – 50 கி
ஏலக்காய் பொடி – தேவையான அளவு
புட் கலர் பவுடர் – அரை டீஸ்பூன்
ரீபண்ட் ஆயில் – 200 எம்.எல்
செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில், நெய், ரீபண்ட் ஆயில் சேர்க்கவும். அதன்பிறகு அதில் முந்திரி, திராட்சை, சேர்க்கவும். குறிப்பாக கேசரியில் திராட்சி கொஞ்சம் குறைவாக சேர்ப்பது நல்லது. ஏனென்றால் திராட்சை அதிகமாக சேர்த்தால் புளிப்புத்தன்மை வந்துவிடும்.
அதன்பிறகு மீடியம் சைஸ் இருக்கும் ரவையை அதில் சேர்க்கவும். இந்த கலவையை ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த கலவை நன்றாக மிக்ஸ் ஆனவுடன், அடுப்பை பற்றவைத்து அந்த கடாய்யை அடுப்பில் வைக்கவும்.
சிறிது நேரத்தில, ரவை வறுத்த வாசனை, மற்றும் அதில் சேர்த்துள்ள திராட்சை வெடித்து வரும்போது இந்த மிக்ஸ் வெந்துவிட்டது என்று என்று வைத்துக்கொள்ளலாம். அடுப்பை ஆன் செய்ததில் இருந்து தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
ரவை நன்றாக கொதித்து அடங்கியவுடன்’, அதில் வெந்நீர் சேர்க்கவும். ஒரு கிலோ ரவைக்கு 2 அரை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரில் ரவை வெந்து கெட்டியானவுடன், சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை சேர்த்த சிறிது நேரத்தில், ரவை கெட்டித்தன்மையை இழந்து கொழகொழப்பாக வரும். இதை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவையில் பபுள்ஸ் வந்துவிட்டால் சர்க்கரை முழுவதும் கரைந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.
அதன்பிறகு இந்த கலவையில் புட்கலர் பவுடரை சேர்க்கவும். அதன்பிறகு இந்த கலவையை நன்றாக கிளறிவிட்டு அடுப்பை ஆப் செய்துவிட்டு, அதில், ஏலக்காய் பொடியை சேர்த்து கிண்டினால் சுவையான ரவா கேசரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“