சமையல் செய்வதற்கு முக்கியமான தேவை அடுப்பும், நெருப்பும். இன்றைய காலக்கட்டத்தில் நெருப்பு இருந்தால் தான் சமைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அதே சமயம் பண்டைய காலக்கட்டத்தில், நெருப்பு இல்லாமல், சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இப்போதும் ஒரு சில இடங்களில் அடுப்பும் நெருப்பும் பயன்படுத்தாமல் அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் அடுப்பும் நெருப்பும் இல்லாமல் சமைக்கக்கூடிய 3 வகை சட்னிகளை இங்கு பார்ப்போம்.
தக்காளி - பூண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு - 8 பல்
தக்காளி 2
கடுகு - கால் டீஸ்பூன்
வெல்லாம் - ஒரு சிறு துண்டு
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
நன்கு பழுத்த தக்காளிப் பழங்களை நறுக்கி, மற்ற அனைத்துப் பொருட்களுடனும் சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்து எடுத்தால், தக்காளி பூண்டு சட்னி தயார். இந்த சட்னியை கிச்சடி அல்லது தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள, சிறிது இனிப்பு சுவையுடன் கூடிய சுவையான தக்காளிச் சட்னி தயார்.
நெல்லிக்காய்-கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி 2 கைப்பிடி
பெரிய நெல்லிக்காய் 4
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காய்களைக் கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் சேர்த்து மசிய அரைத்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி நெல்லிக்காய் சட்னி ரெடி. எந்த வகை சாதமாக இருந்தாலும் இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
இஞ்சி-புளி சட்னி
தேவையான பொருட்கள்:
இஞ்சி 50 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை கழுவி, தோல் சீவி நறுக்கிக்கொண்டு அதனுடன், உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு மசிய அரைத்து எடுத்தால் சுவையான இஞ்சி புளி சட்னி ரெடி. நீங்களும் வீடுகளில் அடுப்பு மற்றும் நெருப்பு இல்லாமல் இந்த சட்னியை செய்து பார்க்கலாம்.