டீ கடை ஸ்டைலில் மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – அரை கிலோ
தூள் உப்பு – அரை டீஸ்பூன்
Advertisment
Advertisements
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 50 மில்லி இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
வறுத்த நிலக்கடலை பருப்பு – 75 கிராம்
கடலை மாவு – 1 கப் (150 கிராம்)
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீட்டு வாக்கில் வெட்டி உதிரியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில், தூள் உப்பு, தனி மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில், இடித்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், கருவேப்பிலை மல்லி இலை எல்லாம் சேர்த்து, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பிசைந்துவிடவும்.
அதன்பிறகு இதில் சிறிது சிறிதாக கடலை மாவை சேர்த்து வெங்காயத்தை கிளறி விடவும். முழு கடலை மாவையும் கொட்டி பிசைந்தவுடன், அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.