கேரளாவின் மிகவும் சிறப்பான ஒரு இனிப்பு உணவு இது. அதிலும் பலாப்பழம் இருக்கும்போது செய்யக்கூடிய சக்கை வரட்டியை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கப் போகிறோம். இந்தச் சக்கை வரட்டியைச் செய்து வைத்துக்கொண்டு மாதக்கணக்கில் சேமித்து வைக்கலாம். பலாப்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும்போதெல்லாம் இதை எடுத்துச் சாப்பிடலாம். இதை வைத்துக்கொண்டு பாயசமும் பண்ணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பலா பழம் – முக்கால் கிலோ
வெல்லம் – 300 கிராம்
Advertisment
Advertisements
ஏலக்காய் சுக்குப்பொடி – தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பலா பழத்தை கொட்டை எடுத்துவிட்டு, உரித்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து, இந்த கலவையை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகு வடிவில் செய்துகொள்ளவும். அதன்பிறகு அடுப்பில் ஒரு வாணல் வைத்து, அரைத்து வைத்துள்ள பலா பழ கூழை அதில் சேர்த்து சற்று கெட்டி ஆகும் வரை கிண்டவும். அதன்பிறகு இந்த
கலவையில் வெல்ல கரைசலை, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரி விடவும். வெல்ல கரைசல் சேர்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளரவும். இறுதியாக ஏலக்காய் சுக்குப்பொடியை கலந்து கிண்டிவிட்டு, இறக்கினால், பலாப்பழ சக்கை வரட்டி ரெடி.