நடிகரு ஜெய் ஸ்டைலில் சோம்பேறி சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா? இந்த சோம்பேறி சிக்கன் 20 நிமிடங்களில் தயராகிவிடும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
பிரியாணி இலை 1
இலவங்கப்பட்டை 1/2 குச்சி
கிராம்பு 3
ஏலக்காய் 3
நட்சத்திர சோம்பு 1
மிளகு 1/2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது ஒன்னறை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1
கறிவேப்பிலை
மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா 3/4 டீஸ்பூன்
உப்பு
தயிர் 4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து சிக்கனை சேர்த்து அடுத்து கொடுக்கப்பட்ட பொதுட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி சேர்க்கவும். நன்றாக கலக்கியவுடன், ஒரு பிரஷர் குக்கரில் 5-6 டீஸ்பூன் எண்ணெய், விட்டு, அதில் சிக்கன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு 2 விசில் (சுமார் 10 நிமிடங்கள்) வரும்வரை வேக வைக்கவும்.
அடுத்து மிக்ஸியில், 5-6 தேங்காய் துண்டுகள், 4 முந்திரி, 1/2 டீஸ்பூன் பாப்பி விதைகள், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து, குக்கர் 2 விசில் வந்தவுடன், ப்ரஷர் அடங்கியவுடன் அதில் சேர்த்து வதக்கி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சோம்பேரி சிக்கன் தயார். சாதம்/சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.