மிகவும் சுவையான, ஒரு நாள் முழுவதும் கெட்டுப்போகமால் இருக்கும் கத்தரிக்காய் பொடிக்கறி செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – ஒன்னறை கிலோ
கடலைப்பருப்பு – 50 கிராம்
வெள்ளை உளுந்து – 50 கிராம்
பச்சை அரிசி – 50 கிராம்
பெருங்காயம் – 10 கிராம்
வரமிளகாய் – 15 கிராம்
பெருங்காய தூள் – 15 கிராம்
கடுகு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 25 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
கடலை எண்ணெய் – 200 எம்.எல்.
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை அரிசி, பெருங்காயம், ஆகியவற்றை ஒரு கடாயில் சேர்த்து அடுப்பை லோஃபிளேமில் வைத்து நன்றாக வறுக்கவும்.
இந்த கலவை 50 சதவீதம் வறுபட்டவுடன் அதில், வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும். இந்த கலவை வறுப்பட்டவுடன், தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
5 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொண்டு இந்த பொடியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில், கடலை எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும். அதன்பிறகு வெட்டி வைத்த கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுப்பை லோஃபிளேமில் வைத்து வதக்கினால் தான் பதமாக வதக்க முடியும். கத்தரிக்காய் வதங்கும்போது அதில் மஞ்சள் தூள் சேர்த்துக்க்கொள்ளவும். நன்றாக வதங்கியதும், அதில் பெருங்காயத்தூள், சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பிறகு மிளகாய் தூள் சேர்த்து, கிளறவும். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையாக கத்தரிக்காய் பொடிக்கறி தயார்.