எல்லோரும் எளிமையான செய்யக்கூடிய அதே சமயம், மிஸ்டேக் செய்யக்கூடிய காலிஃபிளவர் 65 செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் – 1
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
Advertisment
Advertisements
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 5 டீஸ்பூன்
கடலைமாவு – 3 டீஸ்பூன்
சீரகப்பொடி – அரை டீஸ்பூன்
சோம்பு பொடி – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் காலிஃபிளவரை நறுக்கி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, ஒரு பாத்திரத்தில் காலிஃபிளவர் மூழ்கும் வரை தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து, ஒரு கொதி வரும்வரை வேக வைக்கவும்.
அதன்பிறகு காலிஃபிளவரை எடுத்து ஆறவைத்து அதில் உப்பு சேர்த்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். அதன்பிறகு மிளகாய் தூள், அரிசிமாவு, கடலைமாவு, சீரகப்பொடி சோம்பு கொடி, கொஞ்சம் கருவேப்பிலையை சேர்த்து கிளரவும்.
எல்லாற்றையும் நன்றாக கிளறிவிட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிளரவும்.மாவு காலிஃபிளவரில் ஒட்டுவதற்காக இப்படி செய்ய வேண்டும். அதன்பிறகு எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் 65 ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.