உலகளவில் முருங்கைக்காய் எப்படி அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு, பச்சை பயறில், அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பச்சை பயறை வைத்து சுவையான ஒரு முஹலாய் தால் உணவை வெங்கடேஷ் பட் செய்துள்ளார். அதை எப்படி என்று பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 200 கிராம்
பட்டர் – 70 கிராம்
Advertisment
Advertisements
சீரகம் – அரை டீஸ்பூன்
பிரியாணி இலை – 4
பட்டை– 2-3
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 20 கிராம்
உப்பு தேவையான அளவு
தக்காளி – 4
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மல்லிப்பொடி – அரை டீஸ்பூன்
ப்ரஷ் கிரீம் – 75-100 எம்.எல்
பட்டர் -70 கிராம்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 50 கிராம்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி,
கஸ்தூரி மெட்டி
மிளகாய் பொடி – சிறிதளவு
செய்முறை:
பச்சை பயறை நன்றாக சுத்தம் செய்து முந்தைய நாள் இரவில் ஊறவைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் முதல் 70 கிராம் பட்டரை சேர்த்து காயவைக்கவும்.
அடுத்து அதில் சீரகம், பிரியாணி இலை, பட்டை, சேர்த்து நன்றாக வறுத்து, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், அடுத்து, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அதன்பிறகு இதில், அறைத்த தக்காளி பழச்சாறை சேர்க்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா, தனியா பவுடர் ஆகியவற்றை சேர்த்து, கிளறி விடவும். இந்த கலவையில் 300 எம்.எல். தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், வேகவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள, பச்சை பயறை சேர்த்து நன்றாக மசித்து விடவும். இந்த கலவை நன்றாக 7-8 நிமிடங்கள் வெந்தவுடன், அடுத்து அதில் ப்ரஷ’ கிரீம் சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், 2-வது 70 கிராம் பட்டரை அதில் சேர்க்கவும். இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பான் வைத்து, நெய் சேர்த்து, பூண்டை இடித்து அதில் சேர்க்கவும். இந்த கலவை நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை வதக்கவும்.
இடையில், வேக வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள கலவையில், கொத்தமல்லி இலை, கஸ்தூரி மெட்டி இலையை சேர்க்கவும். அதன்பிறகு நெய்யில் ரோஸ்ட் செய்துள்ள பூண்டில், மிளகாய் தூள் சேர்த்து, பச்சை பயறு கலவையில் சேர்க்கவும். இறுதியாக அந்த கலவையை மிக்ஸ் செய்து லைட்டாக கொதிக்க வைத்து எடுத்தால் முஹலாய் தால் ரெடி.