சுவையான நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழிக்கறி – 1 கே.ஜி
சின்ன வெங்காயம் – கால் கிலோ
Advertisment
Advertisements
தக்காளி – 3
காய்ந்த மிளகாய் 2-3
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
மல்லி இலை – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் – 200 எம்.எல்.
வறுக்க மசாலா பொருட்கள
மல்லி 3 டீஸ்பூன்
சீரகம் – ஒன்னறை டீஸ்பூன்
மிளகு 1டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை 2 பீஸ்
கிராம்பு 4
வரமிளகாய் – 4-5
செய்முறை
முதலில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவை ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பானில், நல்லண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன, அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அதில் கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து கிண்டிவிடவும். அதன்பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை நன்றாக வதங்கியதும், சிக்கனை சேர்த்து வதக்கவும். இந்த கலவையில் தண்ணீர் சேர்க்காமல், நன்றாக வதக்கி, சில நிமிடங்கள் கழித்து மூடி வைக்கவும். அதன்பிறக சில நிமிடங்கள் இடைவெளியில் அவ்வப்போது
திறந்து கிண்டிவிடவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கிண்டிவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையாக நாட்டுக்கோழி வறுவல் ரெடி.