முட்டை இருந்தால் தான் ஆம்லெட் செய்ய முடியுமா? அப்படியில்லைங்க! நாம் இன்று முட்டையில்லாமல் சைவ ஆம்லெட் செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
அரை கப் ஊறவைத்த பாசிப்பயறு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
மிளகுத்தூள்
செய்முறை:
அரை மணி நேரம் ஊறவைத்த பாசிப்பயறை ஒரு சிறிய ஜாரில் சேர்த்து, நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, மீண்டும் நன்றாகக் கலந்து விடுங்கள்.
தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் மூன்று ஸ்பூன் மாவை எடுத்து மெதுவாகப் பரப்பி விடுங்கள். சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதன் மேல் மிளகுத்தூள் தூவி, மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடுங்கள்.ஒரு நிமிடம் கழித்து ஆம்லெட்டைத் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடுங்கள்.
அவ்வளவுதாங்க! மிகவும் சுவையான சைவ ஆம்லெட் தயார். குழந்தைகள் ஆம்லெட் கேட்கும் போது, முட்டை இல்லை என்று தயங்க வேண்டாம். என்றால்மாதிரி ஆரோக்கியமான பாசிப்பயறை வைத்துக்கூட நாம் சைவ ஆம்லெட் செய்யலாம்.