தயிர்சாதம், ரச சாதம் என எந்த சாதமாக இருந்தாலும், அதற்கு இந்த முட்டை மிளகு வறுவல் அருமையான சைடிஷாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை முதல் ஒரு டேபிள்ஸ்பூன் (காரத்திற்கேற்ப)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான கறிவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து, நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இது ரொம்ப கிரேவியாக மாற வேண்டாம். இப்போது, ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், காரத்திற்கேற்ப அரை டேபிள்ஸ்பூன் முதல் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி விடவும். கடைசியாக, நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அல்லது வேகவைத்து நறுக்கி சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு நிமிடம் சமைக்கவும்.அவ்வளவுதான்! ஒரு சுவையான முட்டை மிளகு வறுவல் தயார். இதை நீங்கள் கண்டிப்பாக முயற்சித்துப் பாருங்கள்.