சிக்கன், மட்டன் கிட்டக் கூட வர முடியாது... முட்டை வச்சு சுக்கா; இன்னும் இருக்கான்னு கேட்பிங்க!

முட்டையில் உள்ள கோலின், இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஹோமோசைஸ்டீன் போன்ற அமினோ அமிலங்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

முட்டையில் உள்ள கோலின், இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஹோமோசைஸ்டீன் போன்ற அமினோ அமிலங்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
egg

முட்டையில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. முட்டையில் உள்ள கோலின் (Choline) மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைத்து, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது அல்சைமர் போன்ற மூளை சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.
முட்டையில் உள்ள கோலின், இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஹோமோசைஸ்டீன் போன்ற அமினோ அமிலங்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

Advertisment

மேலும், இது உடலில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது. முட்டையில் உள்ள ஃபோலிக் ஆசிட், கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தையின் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இப்படி பல பயனகளை அள்ளித்தரும் முட்டையை வைத்து பல விதமான உணவுகள் தயார் செய்யலாம் என்றாலும், மட்டன் மற்றும் சிக்கனுக்கு மாற்றாக முட்டையை வைதது சுக்கா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

முட்டை -5

Advertisment
Advertisements

கடலைமாவு – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – 2

கறிவேப்பிலை சிறிதளவு

தக்காளி – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் முட்டையை உடைத்து, அதில், மிளகுத்தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி இட்லி பானையில் வேகவைத்து தனியாக எடுத்தக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுத்து தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

அதன்பிறகு, வேகவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள முட்டையை, சிறு சிறு துண்டுகளாக கட செய்து, அதில் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை சுக்கா ரெடி.

Egg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: