ஹோட்டல் ஸ்டைலில் வெண் பொங்கல் தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பொன்னி பச்சரிசி – ஒரு கப்
பாசி பருப்பு – அரை கப்
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
துருவிய இஞ்சி – அரை ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்ப – தேவையான அளவு
முந்திரி – ஒரு ஸ்பூன்
நெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் பாசிப்பருப்ப பச்சரிசி இரண்டையும் சேர்த்து 5 கப் அளவுக்க தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்
5 விசில் வந்து குக்கரன் ப்ரஷர் அடங்கியவுடன் அதனை திறந்து சிறிதளவு நெய் விட வேண்டும். அடுத்து ஒரு பானில், சிறிதளவு எண்ணெய் நெய் சேர்த்து காய்ந்ததும், அதில், மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
முந்திரி பொன்னிறமாக மாறியவுடன் இந்த தாளிப்பை எடுத்து குக்கரில் இருக்கும் பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான வெண்பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“