நீங்கள் வெளியூர் பயணம் போனால் சாப்பிட ஸ்னாக்ஸ் எடுத்து செல்லும் பழக்கம் இருந்தால் இதை ட்ரை பண்ணுங்க. இந்த நெய் கடலை சூப்பரான டேஸ்ட் மற்றும் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டு - 5-6 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி, 8-10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பில் இருந்து தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் பரப்பி அரை மணி நேரம் மின்விசிறிக்கு அடியில் உலர்த்தவும். பருப்பு நன்கு காய்ந்து, வறண்டு இருக்க வேண்டும்.
இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடலைப்பருப்பை சிறிது சிறிதாகப் போட்டு பொரித்தெடுக்கவும். பருப்பு வெந்ததும், மேலே மிதக்க ஆரம்பிக்கும். பொன்னிறமாக மாறியதும் எடுத்துவிடவும்.
அனைத்து கடலைப்பருப்பையும் பொரித்து எடுத்த பிறகு, அதே எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரித்தெடுக்கவும். பொரித்த கடலைப்பருப்பு சூடாக இருக்கும்போதே, அதனுடன் தனி மிளகாய் தூள், பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு குலுக்கி விடவும். இப்போது சுவையான எங்க பாட்டி ஸ்பெஷல் நெய் கடலை தயார்!