விருந்து நிகழ்ச்சி என்றாலும், நாம் வீட்டில் சாப்பாடு செய்தாலும், அப்பளம் என்பது பொதுவான ஒரு சைடுடிஷ் என்று சொல்லலாம். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அப்பளத்தை பொதுவாக நாம் நடைகளில் வாங்கியே பயன்படுத்துவோம். ஆனால், இதை நம் வீட்டிலேயே செ்யயலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சாப்பாடு அரிசி : ஒரு கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
Advertisment
Advertisements
காய்ந்த மிளகாய் – 3
கொத்தமல்லி, கருவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். சரியான பதத்துடன் மாவை எடுத்து அதில், சீரகம், மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்த மிளகாய் தூய், கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, கலக்கவும்.
அரிசி மாவு தண்ணியாக இருந்தால் அதில், சிறிதளவு அரிசிமாவை சேர்த்து கெட்டி பதத்திற்கு கரைத்துக்கொண்டு, ஒரு படத்திரத்தில், சிறிதளவு தண்ணீர் விட்டு, அதன் மேல்பகுதியை ஒரு துணை வைத்து நன்றாக கட்டி, அடுப்பில் வைத்துவிடவும். ‘
தண்ணீர் சூடாகி, துணிக்கு மேல் ஆவி வரும்போது, கரைத்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து அதில் தோசை போல் சுட்டு எடுத்து நிழலில் உளற வைத்து எடுத்தால் சுவையான அப்பளம் ரெடி. இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து சாப்பிடலாம்.