மதர்ஸ் டே ஸ்பெஷல்: நாக்கில் வச்சாலே கரையும் 'அசோகா அல்வா'... இப்படி செஞ்சு எல்லோரையும் குஷி படுத்துங்க!

மதர்ஸ்டே ஸ்பெஷல் அசோகா அல்வா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

மதர்ஸ்டே ஸ்பெஷல் அசோகா அல்வா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ashoka halwa

மதர்ஸ்டே ஸ்பெஷல் அசோகா அல்வா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

சன் ஃபிளவர் ஆயில் ( Sunflower oil) - 1 cup (250 ml)

நெய் (Ghee) - ½ cup (125ml)

முந்திரிப் பருப்பு (Cashew nut) - 50 gram

மைதா (Maida) - ½ cup (75 gram)

அரிசி மாவு (Rice flour ) - ½ cup (75 gram)

பாசிப்பருப்பு (Moong dal) - 150 gram

தண்ணீர் (Water) - 450 ml

சர்க்கரை (Sugar) - 500 grams

ஏலக்காய் பொடி (Cardamom powder) - 1/4 tsp

பச்சைக் கற்பூரம் (Edible Camphor) - a pinch

செய்முறை:

முதலில், ஒரு வாணலில், எண்ணெய் சேர்த்துக்கொண்டு அடுத்து நெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் மற்றும் நெய்யில் முந்திரி பருப்பை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

Advertisment

அடுத்து மைதா மாவை, எண்ணெய் கலவையில் சேர்த்து கிண்டவும். அதன்பிறகு அரிசி மாவையும் சேர்த்து கட்டி படாத அளவுக்கு கிண்டிவிடவும். பாசிபருப்பை நன்றாக வேகவைத்து குழைந்த பருப்பை இதில் சேர்க்கவும்.

அடுத்து சர்க்கரையை அந்த கலவையில் சேர்த்து கலக்கவும். எண்ணெய் பிரிந்து தனியாக வரும்வரை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதன்பிறகு அதில், கலர் பொடியை சேர்த்து கிண்டவும்.

Advertisment
Advertisements

கடைசியாக ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து வறுத்து வைத்துள்ள முந்திரியை இதில் சேர்த்து கிளறினால், சுவையான அசோகா அல்வா ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

halwa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: