குழந்தைகளுக்கு பிடித்த சுவையான கோதுமை லட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு - 3 கப்
நெய் - 1 கப்
Advertisment
Advertisements
முந்திரி - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானவுடன், அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரி வருபட்டவுடன், அதனை எடுத்தவிட்டு, அதே நெய்யில், கோதுமை மாவை சேர்த்து வறுக்கவும்.
கோதுமை மாவு பொன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்துவிட்டு, வோறொரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு, அதில், ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்க்கவும். அடுத்து சர்க்கரையை, மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சேர்க்கவும்.
இந்த கலவையை லட்டு பதத்திற்கு வரும் வரை சூடான நெய்யை ஊற்றி கிண்டி விடவும். லட்டு பதத்திற்கு வந்தவுடன், இதனை லட்டு மாதிரி உருண்டையாக பிடித்து எடுத்தால், கோதுமைமாவு லட்டு ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த லட்டை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.