நச்சுகளை அடித்து வெளியேற்றும்... சுகருக்கு பெஸ்ட் மெடிசின்: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் அதே சமயம், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பாவக்காய் ஊறுகாய் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் அதே சமயம், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பாவக்காய் ஊறுகாய் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் அதே சமயம், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பாவக்காய் ஊறுகாய் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
Advertisment
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பாவக்காய் – ஒரு கப்
மோர் – 100 எம்.எல்
Advertisment
Advertisements
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – கால் ஸ்பூன்
வெங்காய் விதைகள் – அரை ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
ஓமம் – அரை ஸ்பூன்
சோம்பு – ஒன்னறை ஸ்பூன்
மஞ்சள் கடுகு – 2 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
துருவிய மாங்காய் – ஒரு கப்
கடுகு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒன்றைரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பிளாக் சால்ட் – சிறிதளவு
குக்கிங் வினிகர் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாகற்காயை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய பாகற்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, மோர் மற்றும் உப்பு சேர்த்து, கையால் நன்கு பிசைய வேண்டும். இதை சுமார் 5 நிமிடங்கள் வரை பிசையுங்கள். இப்படிச் செய்வதால், பாகற்காயில் உள்ள கசப்புத் தன்மை நீங்கிவிடும்.
5 நிமிடங்கள் கழித்து, மோரை வடிகட்டிவிடவும். பாகற்காய்களை மட்டும் தனியாக எடுத்து, மீண்டும் மீண்டும் உப்பு சேர்த்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, பாகற்காய்களை நன்கு பிழிந்து எடுக்கவும். இப்படி பிழிந்து எடுக்கும்போது, பாகற்காயில் உள்ள கசப்பு முழுமையாக வெளியேறும்.
அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து கலஞ்சி (வெங்காய விதைகள்), சீரகம், துருவிய மாங்காய், சோம்பு, மஞ்சள், கடுகு, உள்ளிட்ட மசாலாப் பொருட்களை நல்ல வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்ததும், அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். மாவு போல நைசாக அரைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வாணலி சூடானதும், கடுகு எண்ணெயைச் சேர்க்கவும். உங்களுக்கு கடுகு எண்ணெய் பிடிக்கவில்லை என்றால், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போதே, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து, பூண்டு மற்றும் துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். மேலும், இந்த மசாலாவுக்குத் தேவையான உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்க்கவும்.
அடுத்து நாம் முன்னதாக பிழிந்து வைத்துள்ள பாகற்காய்களை மசாலாவில் சேர்க்கவும். பாகற்காயில் தண்ணீர் இருந்தால், அதை நன்கு பிழிந்துவிட்டு சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரு நிமிடம் நன்கு கிளறவும். இந்த சூட்டில், பாகற்காய்கள் மசாலாவில் ஊறி, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தின் சுவைகளை உள்வாங்கிக்கொள்ளும். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும். கடைசியாக, இரண்டு கரண்டி வினிகர் சேர்த்து, நன்றாகக் கிளறவும். அவ்வளவு தான் சுவையான பாகற்காய் ஊறுகாய் ரெடி.