New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/04/fFiBYdOhXvxbxBIvaKuB.jpg)
வெங்கடேஷ் பட் ஸ்டைலில், கறியே இல்லாமல், சூப்பரான சைவ சால்னா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
வெங்கடேஷ் பட் ஸ்டைலில், கறியே இல்லாமல், சூப்பரான சைவ சால்னா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்’
கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
சோம்பு, கசகசா – தலா ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி ஒரு கைப்பிடி
பட்டை, பிரிஞ்சு இலை, ஏலக்காய் லவங்கம் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா ஒரு கொத்து, கொத்தமல்லி ஒரு கொத்து
தக்காளி 2
மஞ்சள் தூள் – அரை டீபூன், காஷ்மீர் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா அரை ஸபூன்
உப்பு தேவையான அளவு
கடலை மாவு – ஒன்னறை டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய் துருவலை எடுத்து அதில், சோம்பு, கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அதில், பட்டை, பிரிஞ்சு இலை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
அதன்பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து தாளித்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு தேவையாள அளவு ஒப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன்பிறகு கடலைமாவை கட்டி இல்லாமல் கரைத்து, அதில் சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக கொதித்து வரும்போது அதில், 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பரோட்டா சைவ சால்னா ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.