/indian-express-tamil/media/media_files/2025/04/13/iCGJvtSlsd7K5MYOCyX3.jpg)
இந்த ரெசிபிக்கு நாம் வீட்டில் அரைத்த கோதுமை மாவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீட்டில் அரைத்த மாவு இல்லை என்றாலும், கடைகளில் கிடைக்கும் எந்த பிராண்ட் மாவையும் பயன்படுத்தலாம். இந்த சப்பாத்தி எப்படி செய்வது என்று படிப்படியாகக் காணலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 3 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – சுமார் 1.5 கப்
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் 3 கப் கோதுமை மாவு, 1/2 டீஸ்பூன் உப்பு, மற்றும் 2-3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு முழுவதும் எண்ணெய் மற்றும் உப்பு சமமாக கலக்கும் வரை உங்கள் கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசைய வேண்டும். பிசைந்த மாவை ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். அதன்பிறகு மாவை மீண்டும் ஒருமுறை லேசாக பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும். இந்த அளவில் உங்களுக்கு 7 உருண்டைகள் கிடைக்கும்.
ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பலகையில் சிறிதளவு மாவு தூவி, மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியின் மீது சிறிது எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவவும். இப்போது சப்பாத்தியின் இரண்டு பக்கங்களையும் நடுவில் மடித்து, அதன் பிறகு மறுபடியும் மேல் மற்றும் கீழ் பக்கங்களை மடித்து சதுர வடிவில் மடித்துக் கொள்ளுங்கள்.இந்த சதுர வடிவ மாவை மெல்லிய சப்பாத்தியாக மீண்டும் தேய்க்கவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
தேய்த்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் வேக விடவும். சப்பாத்தி ஒரு பக்கம் வெந்து வரும்போது லேயர்கள் பிரிய ஆரம்பித்து சப்பாத்தி மெதுவாக உப்பி வரும். இப்போது சப்பாத்தியை திருப்பிப் போட்டு, மறுபக்கம் வேக விடவும். விருப்பப்பட்டால் இந்த நேரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டெடுக்கலாம். எண்ணெய் சேர்ப்பதால் சப்பாத்தி மேலும் சுவையாக இருக்கும். இப்போது உங்கள் சுவையான, மிருதுவான, பல லேயர்கள் கொண்ட சதுர சப்பாத்தி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.