பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி விரும்பி சாப்பிடும், சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரைகிலோ
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
பட்டை, சோம்பு – சிறிதளவு
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்’
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தயிர் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில், சோம்பு, பட்டை, சேர்த்து தாளித்து, அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து, தக்காளியை பேஸ்டாக அரைத்து சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக சிக்கனை சேர்த்து வதக்கவும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து, தயிர் சேர்த்து, கிளறிவிட்டு, வேக விடவும். 15 நிமிடங்கள் கழித்து 2 பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.