கொங்கு நாட்டு பச்சை மிளகாய் சிக்கன்... இனி அடிக்கடி இத செய்வீங்க: செஃப் தீனா ரெசிபி

செஃப் தீனா ஸ்டைலில் பச்சை மிளகாய் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?

செஃப் தீனா ஸ்டைலில் பச்சை மிளகாய் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
Chicken Green chilli

செஃப் தீனா ஸ்டைலில் பச்சை மிளகாய் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி - 2 கிலோ

பச்சை மிளகாய் - 25

Advertisment
Advertisements

வெங்காயம் - 500 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

சீரக விதைகள் - 1 தேக்கரண்டி

கிராம்பு - 10 எண்ணிக்கை

இலவங்கப்பட்டை - 2 எண்ணிக்கை

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்

மிளகு - 10 கிராம்

கொத்தமல்லி இலைகள் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

கடலை எண்ணெய் - 100 மிலி

செய்முறை:

முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், கடுகு சேர்த்து தாளிக்கவும். அடுத்து அதில், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் வதங்கியது அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

இந்த கலவை சிறிது நேரம் வதங்கியவுடன், அதில் சிக்கனை சேர்த்து, வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதங்கியவுடன், கறி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கறியை வேக வைக்கவும்.

அடுத்து, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக மிக்ஸியில், அரைத்துக்கொள்ளவும். கறி அரைபாகம் வெந்தவுடன், இந்த பொடியை அதில் சேர்த்து மீண்டும் வேக வைக்கவும். இறுதியாக தண்ணீர் சுண்டியவுடன் மல்லி இலை சேர்த்து இறக்கினால், சுவையான பச்சைமிளகாய் சிக்கன் ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: