சுவையான சிக்கன் ரோஸ்ட் எளிமையான முறையில் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன்: 1 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய்: 8 (வத்தல்)
சோம்பு: 1 டீஸ்பூன்
சீரகம்: 1 டீஸ்பூன்
மிளகு: 1 டீஸ்பூன்
தனியா: 2 டீஸ்பூன்
பட்டை: சிறிய துண்டு
கிராம்பு: 3-4
கெட்டியான தயிர்: ¾ கப்
உப்பு: தேவையான அளவு
சர்க்கரை: 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை: ஒரு கொத்து
எண்ணெய்: பொரிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு
செய்முறை
முதலில், சிக்கனை நல்ல பொன்னிறமாக மாறும் வரை நெய்யில் பொரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மசாலா அரைப்பதற்கு, ஒரு கடாயில் காஷ்மீரி மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, தனியா, பட்டை, கிராம்பு ஆகிய அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயில் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். அதனுடன் முக்கால் கப் கெட்டியான தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மசாலா எண்ணெய் பிரிந்து வந்ததும், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்க்கவும். அதிகமாக தண்ணீர் சேர்க்கக் கூடாது.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மசாலாவும் சிக்கனும் நன்கு கலக்குமாறு கிளறவும். மூடி போட்டு, சுமார் 2 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்க விடவும். இது மசாலா சிக்கனுடன் நன்கு சேர உதவும். கடைசியாக, ஒரு கொத்து கறிவேப்பிலையை உள்ளே சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை அணைத்து விடவும். இப்போது சூப்பரான, மணமணக்கும் காரசாரமான தமிழ்நாடு சிக்கன் ரோஸ்ட் தயார்.