திண்டுக்கல் பிரியாணி அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காகவே மிகவும் பிரபலமானது. இந்த சுவைக்கு முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படும் பிரத்யேகமான மசாலாதான். அந்த மசாலாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
தனியா - 30 கிராம்
சீரகம் - 10 கிராம்
சோம்பு - 10 கிராம்
கறிவேப்பிலை - 5 கிராம்
கிராம்பு - 3 கிராம்
ஏலக்காய் - 3 கிராம்
மராத்தி மொக்கு - 2 கிராம்
பட்டை - 5 கிராம்
அன்னாசிப்பூ - 3 கிராம்
ஜாதிபத்திரி - 1 கிராம்
பிரிஞ்சி இலை - 1 கிராம்
வரமிளகாய் - 15 கிராம்
கல்பாசி - 2 கிராம்
ஜாதிக்காய் - 1 கிராம்
முந்திரி - 2 கிராம்
செய்முறை
முதலில், மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு வாணலியில் மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு, ஆறிய மசாலாப் பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த மசாலாவை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். பிரியாணி செய்யும் போது, 2 முதல் 3 தேக்கரண்டி மசாலாவைச் சேர்த்து பிரியாணியின் சுவையை அதிகரிக்கலாம்.