பச்சை மாங்காய் வைத்து கோடையில் குளு குளு குல்பி ஐஸ் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 2
சர்க்கரை - முக்கால் கப்
Advertisment
Advertisements
புதினா இலைகள் – சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
மாம்பழ எசன்ஸ் 1/2 டீஸ்பூன்
பச்சை புட் கலர் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 3 கப்
செய்முறை
முதலில் மாங்காய்யை நன்றாக கழுவிவிட்டு, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இந்த மாங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்து முடித்தபின் அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைக்கவும். அடுத்து புதினா இலைகள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மாங்காய் எசன்ஸ், புட்கலர் அனைத்தையும் சேர்க்கவும்.
இறுதியாக தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த ஜூஸை சில்வர் டம்ளர் அல்லது, குல்பி மோல்டில் ஊற்றி, சில்வர் பேப்பர் வைத்து மூடி அதில் நடுவில் ஓட்டை போட்டு குச்சியை சொருகி வைக்கவும்.
இந்த குல்பி மோல்ட்களை 8 மணி நேரம் ப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான மாங்காய் குல்பி ரெடி. நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.