வாயில் வைத்தவுடன் கரையும் அளவுக்கு ஒரு சுவையான குலோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா? இந்த குலோப் ஜாமுன் பாசிப்பருப்பில் செய்யப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு – ஒரு கப்
பால் – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை வறுத்து, ஒரு குக்கரில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பாகு ரெடி செய்யவும். அதில் ஏலக்காய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதன்பிறகு, வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து அதில், மைதாமாவு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
அதன்பிறகு, இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, உங்களுக்கு பிடித்த சைஸில் செய்து, எண்ணெயில் பொண்ணிறமாக பொறித்து எடுத்து, சர்க்கரை பாகுவில் கலந்து ஒன்றரை மணி சேரம் ஊறவிட்டு எடுத்தால் குலோப் ஜாமூன் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.