அரிசி மாவில் முறுக்கு செய்வது வழக்கமானது. அதுவும் பண்டிகை காலங்களில் முறுக்கு செய்து அதை கிட்டத்தட்ட மாதக்கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது இன்றும் கிராமங்களில் இருந்து வருகிறது. முறுக்கு எண்ணெய்யில் பொறித்து எடுப்பத்தை பார்த்திருப்போம். ஆனால் குக்கரில் முறுக்கு செய்வது எப்படி தெரியுமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - ஒரு க்ளாஸ்
பெருங்காயத்தூள்
Advertisment
Advertisements
எள்ளு
ஓமம்
பச்சரிசி மாவு
வெண்ணெய்
செய்முறை:
முதலில் உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பிறகு, இந்த உளுத்தம்பருப்பை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வேகவைத்து எடுத்த உளுத்தம்பருப்பை மசித்து, அதில் பெருங்காயத்தூள், எள்ளு, ஓமம், பச்சரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை, முறுக்கு ஊழக்கில் சேர்த்து பிழிந்து எடுத்து குக்கர் எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான முறுக்கு ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.