தொண்டை வலிக்கு எந்த மருந்தும் வேணாம்... இந்த மாதிரி குழம்பு செய்து சாப்பிடுங்க; அடிக்கடி ரெடி பண்ண தூண்டும்!

தொண்டை வலியை எப்படி தீர்ப்பது என்று மாத்திரை மருந்து பயன்படுத்தினால், அதை விட்டுவிட்டு, இந்த மாதிரி குழம்பு வைத்து சாப்பிடுவது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தொண்டை வலியை எப்படி தீர்ப்பது என்று மாத்திரை மருந்து பயன்படுத்தினால், அதை விட்டுவிட்டு, இந்த மாதிரி குழம்பு வைத்து சாப்பிடுவது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Recipe News

தொண்டை வலியை எப்படி தீர்ப்பது என்று மாத்திரை மருந்து பயன்படுத்தினால், அதை விட்டுவிட்டு, இந்த மாதிரி குழம்பு வைத்து சாப்பிடுவது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Advertisment

மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1டேபிள் ஸ்பூன்

Advertisment
Advertisements

காய்ந்த இஞ்சி ஒரு துண்டு

கட்டி பெருங்காயம் 2 சிறியது

கடுகு – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

தக்காளி – 3

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பூண்டு – ஒரு கட்டி

காய்ந்த மிளகாய் – 4

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தனி மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

உப்பு தேவையான அளவு

வெல்லம் சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மிளகு, சீரகம், காய்ந்த இஞ்சி, கொத்தமல்லி விதை, கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து கறிவேப்பிலை  வறுத்துக்கொள்ளவும். இந்த கலவை நன்றாக ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து தக்காளியை நறுக்கி, அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில், நல்லெண்ணெய் சேர்த்து, வெந்தயம், மிளு சேர்த்து வறுக்கவும். அடுத்து பூண்டு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

அடுத்து கறிவேப்பிலை சேர்த்து, தனி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், சேர்த்து அரைத்து வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வேக வைத்து, பிரிந்து வந்தடன் புளி கரைசலை அதில் சேர்க்கவும்.

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அதன்பிறகு, வறுத்து அரைத்த பொடியை அதில் சேர்க்கவும். இறுதியாக ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அருமையான மிளகு குழம்பு தயார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: