வீட்டில் தயிர் சாதம் செய்தால், அதற்கு சைட்டிஷ் என்ன செய்வது என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே இந்த டிஷை செய்துகொடுங்கள். முருங்கை கீரை உருளைக்கிழங்கு பொறியல்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை – ஒரு கைப்பி
உருளைக்கிழங்கு – 4
Advertisment
Advertisements
உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பாசி பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள்ளு – அரை டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
வரமிளகாய் – 5
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு – தாளிக்க தேவையாள அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில், உளுத்தம்பருப்பு, பாசி பருப்பு, எள்ளு, சீரகம், வரமிளகாய், சேர்த்து வறுத்து, முருங்கை கீரையை சேர்த்து வறுத்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு தாளித்து, உருளைக்கிழங்கை சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு வறுத்து வைத்துள்ள முருங்கை கீரை பொடியை சேர்த்து ஸ்லோ ப்ளேமில் வேக வைத்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை உருளைக்கிழங்கு பொறியல் தயார்.