லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள். தேங்காய் பால் சாதத்திற்கு, உருளைக்கிழங்கு பாயா எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தக்காளி 2
முருங்கைக்காய் – 1
உருளைக்கிழங்கு – அரை கிலோ (சிறியது)
தேங்காய் 1/2 கப்
கொத்தமல்லி இலைகள் 1/4 கப்
இலவங்கப்பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 1
பச்சை மிளகாய் 3
சோம்பு 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
முந்திரி 10
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு, சோம்பு, பிரியாணி இலை, வெங்காயம், சேர்த்து தாளிக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தக்காளி சேர்த்து முருங்கைக்காய் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து வதக்கவும். அடுத்து, தேங்காய், கொத்தமல்லி இலை இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் சேர்க்கவும். இறுதியாக தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பாயா ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.