வெங்கடேஷ் பட் ஸ்டைலில், ராகி தோசை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 2 கரண்டி
பெருங்காய பொடி – அரை ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 1 கைப்பிடி
மோர் – 1 கப்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
பூண்டு க்ரஷ் செய்ய
நெய் – 1 ஸ்பூன்
பூண்டு - 50 கி
சின்ன வெங்காயம் – 10
வரமிளகாய் – 7
தேஙகாய் எண்ணெய் / நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில், ராகி மாவு, மோர், பெருங்காய பொடி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, அரசி மாவு, உளுந்து மாவு, கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாணில், நெய், பூண்டு சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் வைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை அரைத்து அதில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.
அதன்பிறகு, ஒரு பாணில், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அந்த கலவையில் சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்றாக கிளறி விட்டால் சுவையாக பூண்டு க்ரஷ் தயார்.
அடுத்து கரைத்து வைத்துள்ள ராகிமாவை, எடுத்து நன்றாக கலக்கி விடவும். அதன்பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து ராகி மாவை தோசை கல்லில் ஊற்றி நெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சுவையாக ராகி தோசை தயார். இந்த பூண்டு க்ரஷூடன் சாப்பிட்டு பாருங்கள்.