உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பில் வடை சுட்டு சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் ரவையில் வடை செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர் – 4 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு பானில் தண்ணீர் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு, துருவிய இஞ்சி, கொத்தமல்லி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
இந்த தண்ணீர் நன்றாக கொதித்ததும், 2 கப் ரவையை அதில் சேர்த்து, நன்றாக கிளறவும். உப்புமா பதத்திற்கு கட்டி இல்லாமல் வந்தவுடன் இறக்கிவிடவும்.
இந்த கலவையை, இளம் சூடாக இருக்கம்போது வடை செய்வது போல் கையில் எடுத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பானில் எண்ணெய் விட்டு, கையில் தட்டிய கலவையை பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான ரவை வடை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“