வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மாலை நேரத்திற்கு ஏற்ற ஒரு அருமையான நொறுக்குத்தீனி செய்யலாமா? இதோ, வேகவைத்த சாதம் மற்றும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி சுவையான போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெங்காயம் - 1
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மிக்ஸியில் சேர்த்தும் அரைத்துக்கொள்ளலாம். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, போண்டா வடிவில் தட்டி வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் போண்டாக்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது, சுவையான மற்றும் மொறுமொறுப்பான போண்டா தயார்! இதனுடன் தேங்காய் சட்னி அல்லது சாஸ் சேர்த்து பரிமாறலாம்.