மாவு பிசையும் போது ஆயில் வேணாம்; ரெண்டு சைடும் 10 செகண்ட் வேக விடணும்: சாஃப்ட் சப்பாத்திக்கு ஈஸி டிப்ஸ்
சப்பாத்தியை செய்யும்போது, மிருதுவாக செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான் சாப்பிட சிறப்பாக இருக்கும். அதே சமயம், ரஃப்பாக இருந்தால் சாப்பிடுவது கடினமாக இருக்கும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று சப்பாத்தி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த உணவு ஏராமான நன்மைகள் இருப்பதாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி மிக சிறந்த உணவு என்றும் கூறப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், தமிழகத்தில் கூட பலரும் சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது,
Advertisment
இந்த சப்பாத்தியை செய்யும்போது, மிருதுவாக செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான் சாப்பிட சிறப்பாக இருக்கும். அதே சமயம், ரஃப்பாக இருந்தால் சாப்பிடுவது கடினமாக இருக்கும். இதனால் பலரும் சப்பாத்தியை மிருதுவாக செய்ய பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் மிருதுவாக சப்பாத்தி வருமா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த முறையில் சப்பாத்தி செய்தால், மிருதுவாக வரும்.
எப்படி தெரியுமா? சப்பாத்தி மாவை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, டைட்டாகவும் இல்லாமல், லூசாகவும் இல்லாமல் ஒரு பதமாக பிசைந்து, எண்ணெய் சேர்க்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். முன்பே எண்ணெய் சேர்த்தால், ஒரு மணி நேரம் கழித்து மாவு ரப்பர் மாதிரி ஆகிவிடும். அதனால் சப்பாத்தியை தேய்க்கும்போது எண்ணெய் சேர்த்தால் போதுமானது.
Advertisment
Advertisements
தேய்க்கும்போது இருபுறமும் எண்ணெய் சேர்த்து தேய்த்து சப்பாத்தியை 4-ஆக மடித்து மீண்டும் அதனை தேய்த்து தோசை கல்லில் போட்டு இருபுறமும், எண்ணெய் விட்டு 10 வினாடிகள் என இரு பக்கமும் வேகை வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி தயார். இந்த சப்பாத்தி மிருதுவாகவும், அதே சமயம் சுவையாகவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.