ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி பச்சைப்பயறு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாமா? முதலில், ஊறவைத்த பச்சைப்பயறுடன் ஒரு பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள். இதை கோதுமை மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நாம் வழக்கமாக சப்பாத்தி மாவு பிசைவது போலவே பிசைந்து எடுக்கலாம். மாவை பத்து நிமிடம் ஊற விடவும்.
பத்து நிமிடத்திற்குப் பிறகு, கோதுமை மாவை தூவி, இந்த மாதிரி ஃபோல்டிங் முறையில் சப்பாத்தி தேய்க்கவும். இந்த முறையில் செய்வதால், மதிய உணவு நேரம் வரையிலும் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சூடான தவாவில், சப்பாத்தியை இருபுறமும் திருப்பிப் போட்டு, எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய் – எது உங்களுக்கு விருப்பமோ அதைச் சேர்த்து சுடவும். இப்போது, சூப்பரான பச்சைப்பயறு சப்பாத்தி தயாராகிவிட்டது.
இதற்கு காம்பினேஷனாக மசாலா தயிர் எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் மஞ்சள் பொடி, காரத்திற்கு மிளகாய் தூள், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இதில் வீட்டில் உறை ஊற்றிய பசுமாட்டுத் தயிரைப் பயன்படுத்தி, எல்லாவற்றையும் நன்றாக கலந்தால், மசாலா தயிரும் தயாராகிவிடும். இந்த பச்சைப்பயறு சப்பாத்திக்கு மசாலா தயிர் ஒரு அற்புதமான காம்பினேஷன். இதை நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க வேண்டும்!