இட்லி, தோசை சாப்பிடும்போது சாதாரணமாக ஒரு சட்னி சாப்பிடுகிறீர்களா? இனிமேல் அப்படி வேண்டும். இந்த சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது காரமாகவும், ருசியாகவும், இருக்கும். இதற்கு கொஞ்சம் மிளகாயும் தக்காளியும் இருந்தால் போதும், சூப்பரான சட்னி தயாராகிவிடும். இதை இட்லி, தோசைக்கு ஒரு முறையாவது சட்னியாக ட்ரை பண்ணலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் 4
இஞ்சி – ஒரு துண்டு,
தக்காளி – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தேங்காய் – ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மிக்ஸியில் மைய அரைத்து எடுக்கவும்.
அதன்பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில், எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் அருமையான சட்னி தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.