முட்டை சேர்க்காமல் டீக்கடை கேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
சர்க்கரை ஒரு கப்
ஏலக்காய் – 5
Advertisment
Advertisements
பால் – அரை கப்
மைதா – 2 கப்
சன்ஃபிளவர் ஆயில் – கால்கப்
உப்பு, சமையல் கோடா – ஒரு சிட்டிகை
பச்சரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சர்க்கரையை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து பவுடராக எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதில் பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அடுத்து அதில் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுது்து இன்னொரு கப் மைதாவை உப்பு, சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து இறுதியாக பச்சரிசி மாவையும் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவைத்து, அதன்பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடித்மது எண்ணெயில் பொறித்து எடுத்தால், முட்டை இல்லாத சுவையான டீக்கடை கேக் ரெடி.