ஜவ்வரிசியில் வடை செய்து அதை சட்னி கூட இல்லாமல் சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஜவ்வரிசியில் வடை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 250கி
நிலக்கடலை – 1 கப்
Advertisment
Advertisements
பச்சை மிளகாய் – 3
துருவிய இஞ்சி – ஒன்றரை டீஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 3
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில ஜவ்வரிசியை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து நிலக்கடலையை மண் சட்டியில் போட்டு வறுத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
இந்த நிலக்கடலையை, மிக்ஸியில் போட்டு ஒன்னும் பாதியுமாக அரைத்து, ஊறவைத்த ஜவ்வரிசியில் சேர்க்கவும். அடுத்து இதில், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சியை சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி இலை, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றான பிசையவும். இந்த கலவையை வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு
பொறித்து எடுத்தால் சுவையான ஜவ்வரிசி வடை ரெடி. தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்த கலவையுடன் இதனை தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.