அரை கப் கடலை மாவு வைத்து ஒரு சூப்பரான டேஸ்டி ஸ்வீட் அல்வா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
நெய் – கால்கப்
கடலைமாவு – அரை கப்
Advertisment
Advertisements
சர்க்கரை – அரைகப்
தண்ணீர் – அரை கப்
புட் கலர் – ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5-6
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் கால் கப், நெய் சேர்த்த லோஃபிளேமில் வைத்து சூடாக்கவும். நெய் சூடானவுடன் அதில், கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறி விடவும்.
கடலை மாவு நன்றாக கெட்டியாக பிறகு நெய் உருகி தண்ணீர் பதத்திற்கு வரும்போது, அரைத்த சர்க்கரையை அதில் சேர்த்து கிளரவும். நன்றாக கிளறியவுடன் அதில் தண்ணீர் சேர்த்து கிளரவும்.
அதன்பிறகு அதில் புட் கலர் சேர்த்து கிளறிவிட்டு, உடைத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி, சேர்த்து நன்றாக இடைவெளி விடாமல் கிளறி விடவும். இறுதியாக ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கடலைமாவு அல்வா ரெடி.