கோடை காலம் வந்துவிட்டால் பலரும் குளிர்ச்சியான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக இன்றைய கால இளைஞர்கள் அதிகம் நாடி செல்வது கூல்டிரிங்ஸ் தான். ஆனால் இதில் இருக்கும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதே சமயம் வெயில் காலங்களில், கூல்டிரிங்ஸ் அதிகரித்து வருவது தடுக்க முடியாத ஒரு மாற்றம் தான்.
Advertisment
அதே சமயம் நமது முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் குளிர்ச்சியான பொருட்களை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த வகையிலான ஒரு உணவு தான் கம்பங்கூழ். கம்பு வைத்து செய்யப்படும் இந்த கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது அதே சமயம், குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த கம்பங்கூழ் எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கம்பு – ஒரு கிலோ
Advertisment
Advertisements
வெங்காயம் – 2
மோர் 2 கப்
தண்ணீர் – 4 கப்
செய்முறை
முதலில் கம்பை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு குரகுரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பானை வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பானையில் தண்ணீர் கொதித்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து வேக வைக்கவும். கம்பு நன்றாக வெந்தவுடன், ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எடுத்த வேக வைத்த கம்புடன், நறுக்கிய வெங்காயம், மோர் சேர்த்து கலக்கினால் சுவையான கம்பங்கூழ் ரெடி. இதை மிளகாயுடன் சேர்த்த மாங்காய், வறுத்த வத்தல் மற்றும் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.