கேரளாவின் பாரம்பரியமான பலகாரங்களில் ஒன்று பழம் பொரி. நேந்திரம் பழத்தை வைத்து செய்யப்படும் இந்த பலகாரம், செய்வது மிகவும் எளிமையானது. எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
நேந்திரம் பழம் - 4
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
வெல்லம்- 1 மேசைக்கரண்டி
சோடா உப்பூ 1 சிட்டிகை
உப்பு: 1 சிட்டிகை
தண்ணீர்- தேவையான அளவு
எண்ணெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் நேந்திரம் பழத்தை எடுத்து, அதன் தோலை நீக்கி, நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் 2 அல்லது 3 பாகங்களாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில், மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், சோடா உப்பு, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு, வெல்லத்தை பொடித்து மாவுடன் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக்கொள்ளவும். இப்போது, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கி வைத்த பழத்துண்டுகளை, மாவில் நன்றாக முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வரும் வரை இருபுறமும் வேகவிடவும்.
அவ்வளவுதான்! சுடச்சுட சுவையான பழம் பொரி தயார்.இந்த பலகாரம் மழைக்காலங்களில் காபி அல்லது தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது.