மதிய உணவுக்கு கொங்கு ஸ்டைல் தாளிச்ச தக்காளி சோறு எப்படி செய்வது என்று பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – தேவையான அளவு
தக்காளி – 5
Advertisment
Advertisements
பெரிய வெங்காயம் – 3
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – தேவையான அளவு
மல்லி இலை – ஒரு கைப்பிடி
நிலக்கடலை – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடலை எண்ணெய் 100 மில்லி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அடுத்து அதில் கடுகு மற்றும் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து நிலக்கடலை சேர்த்து நன்றாக வறுக்கவும். வறுபட்டவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து இந்த கலவையுடன், காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கியவுடன், நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிவிட்டு, தண்ணீர் ஈர்த்து பதத்திற்கு வரும்வரை கிண்டிக்கொண்டே இருக்கவும். இந்த சமயத்தில் அடுப்பை ஸ்லோ ஃப்ளேமில் வைத்து செய்யவும்.
தொக்கு பதத்திற்கு வந்தவுடன், வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இறுதியாக அதில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான தாளிச்ச தக்காளி சாதம் ரெடி.