உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை விட சிறு தானியங்கள் அதிக அளவில் நன்மைகள் தருவராக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் மற்ற உணவுகளை விடவும், குதிரைவாலி தானியத்தில் அதிகளவில் ஃபைபர் சத்து உள்ளது. அதன்படி சிறுதானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் குதிரைவாலியை வைத்து தோசை எப்படி செய்வது என்பது இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி – ஒரு கப்
கருப்பு உளுந்து – அரை கப்
Advertisment
Advertisements
உப்பு தேவையான அளவு
பீர்க்கங்காய் சட்னி செய்ய
பீர்க்கங்காய் – 1
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 3
துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி
புளி – 10 கிராம்
தாளிக்க
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் 3
கடுகு
சீரகம்
பெருங்காயப்பொடி
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்ட குதிரைவாலி மற்றும் உளுந்தை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு இவை இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தோசை மாவுக்கு தேவையான பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். உளுந்து மட்டும் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இவை இரண்டையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் தோசைக்கு மாவு தயாராகிவிடும்.
பீர்க்கங்காய் சட்னி செய்ய...
பீர்க்கங்காய் தோல் சீவி, அதன் தோல் மற்றும் விதை பகுதியை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில், கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து துருவிய தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பீர்க்கங்காய் வேக, 100 எம்.எல். தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுட்டும் வரை வதக்கவும் இறுதியாக இதை எடுத்து புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து தாளித்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி.
அரைத்து தனியாக வைத்துள்ள குதிரைவாலி தோசை மாவில், 2 ஸ்பூன் மிளகு பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, கலக்கி, தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையான குதிரைவாலி தோசை ரெடி.