மருத்துவ குணம் கொண்ட மா இஞ்சி குழப்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா? மூச்சு திணறல், மற்றும் அதிக இளைப்பு உள்ளவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் ஆரோக்கியமானது.
Advertisment
தேவையான பொருட்கள்:
மா இஞ்சி – 1 கிலோ
நல்லெண்ணெய் - கால் லிட்டர்
Advertisment
Advertisements
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கருவெப்பிலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
புளி – 125 கிராம்
உப்பு தேவையான அளவு
சின்ன வெங்காயம் – கால் கிலோ
செய்முறை
முதலில் ஒரு கிலோ மா இஞ்சியை 2 பாகமாக பிரித்து ஒரு பாகத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இன்னொரு பாதியை சிப்ஸ் வடிவத்தில் துண்டு துண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடானவுடன் அதில், கடுகு வெந்தயம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை அடுத்தடுத்து சேர்த்து தாளிக்கவும்.
இந்த கலவை நன்றாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு, அரைத்து வைத்துள்ள மா இஞ்சி பேஸ்டை சேர்க்கவும்.
இந்த கலவை பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கிவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, புளி கரைசலை சேர்க்கவும். அடுத்து குழம்பு கொதித்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள மா இஞ்சியை சேர்க்கவும்.