மாதம்பட்ட ரங்கராஜ் ஸ்டைலில் சம்பா கோதுமை அல்வா செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை – 400 கிராம்
சர்க்கரை – ஒன்னே கால் கிலோ
Advertisment
Advertisements
நெய் – முக்கால் லிட்டர்
முந்திரி – 200 கிராம்
ஜாதிக்காய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கோதுமையை ஊறவைத்து கெட்டியாக அரைத்து அதில் இருந்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பாலை அடுத்த நாள் எடுத்து அதில் மேலோட்டமாக இருக்கும் தண்ணீரை விட்டுவிட்டு, அடியில் இருக்கும் கெட்டியான பாலை எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் இந்த கோதுமை பாலை வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு இந்த பாலில் சர்க்கரையை சேர்த்து மிக்ஸ் செய்துவிட்டு, நன்றாக கரண்டியை வைத்து கிளறி விடவும்.
கோதுமை பாலும் சர்க்கரையும் ஒன்றாக இணைந்து கெட்டியாக வரும்வரை இடைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை கெட்டியானவுடன், அதில் படிப்படியாக நெய் சேர்க்கவும்.
முதலில் 200 கிராம் நெய் சேர்த்து கலக்கவும்.அதன்பிறகு நன்றாக கலக்கிவிட்டு, சிறது நேரம் கழித்து மீண்டும் அதே அளவு நெய் சேர்த்து கலக்கவும். அடுத்து இதனுடன் முந்திரி சேர்த்து மீண்டும் நெய் சேர்க்கவும்.
இறுதியாக ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து, கலக்கவும். வாணலியில் ஒட்டாமல், சரியான பதத்திற்கு வரும்வரை கலக்கிவிட்டு இறக்கினால் சுவையான கோதுமை அல்வா ரெடி.