தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான மற்றும் சுவையான உணவு உளுந்து வடை. உளுத்தம்பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மொறுமொறுப்பான, உள்ளே மென்மையான இந்த வடை, தமிழகத்தில் பொதுவாக மெது வடை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வடை பொதுவாக வட்ட வடிவத்தில் நடுவில் ஒரு துளையுடன் இருக்கும். இந்த துளை வடை சீராக வேக உதவுகிறது.
Advertisment
உளுந்து வடைக்கு சில மருத்துவப் பலன்களும் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் வாதம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் உளுந்து வடை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வடையை எண்ணெய் குடிக்காமல் சிறப்பாக பொறித்து எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஒரு கப் உளுந்தை எழுத்துக்கொண்டு அதை நன்றாக கழுவி, சுத்தம் செய்துகொண்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாவுடன், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகு அரை வெங்காயத்தை நல்லா பொடியா கட் பண்ணி சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதேபோல், ரெண்டு பச்சை மிளகாவை பொடியா கட் பண்ணி சேர்த்துக்கொண்டு, ஒரு சின்ன துண்டு இஞ்சி பொடியா நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலை கொஞ்சமா கொத்தமல்லி இலை சேர்த்து இதனுடன், கால் ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்த்து நல்லா ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மாவு பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்தால் தான் வடை வந்து நன்றாக மெதுமெதுன்னு கிடைக்கும்.
Advertisment
Advertisements
சிறிது நேரம் கழித்து, கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு மாவை சிறிது சிறிதாக எடுத்து, கையில் தட்டி, நடுவில் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும். மீதி இருக்கும் மாவையும் இதேபோல் செய்து பொறித்து எடுக்கலாம். வடை, நன்றாக கோல்டன் பிரவுன் வந்ததும் எடுத்தால், மொறு மொறுன்னு சூப்பரான மெதுவடை ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.