பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுப் பெட்டியில் என்ன வைப்பது என்று யோசிக்கிறீர்களா? ஒரு சுவையான மற்றும் சத்தான முட்டை சாதம் சிறந்த தேர்வாக இருக்கும். இதைச் செய்வது மிகவும் எளிது, உங்கள் குழந்தைகள் தங்கள் டிபன் பாக்ஸை காலி செய்து கொண்டு வருவார்கள் என்பது உறுதி.
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
குடைமிளகாய் - பாதி
கேரட் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வேகவைத்த சாதம் - 1 கப்
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். அதே கடாயில், இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கேரட், கேப்சிகம், சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு பெப்பர் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி, சுமார் இரண்டு நிமிடங்கள் வேக விடவும். அதன்பிறகு ஒரு கப் சாதம், பொறித்த முட்டை கொத்தமல்லி, மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான முட்டை சாதம் தயார்!